செயற்கை நுண்ணறிவு துறை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மனித குலத்தை மேம்படுத்துவதில் ஏ.ஐ-யின் பங்கு பற்றிய சிறப்புக் கருத்தரங்கம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
நுஸ்டார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பாக்தர் பங்கேற்ற இக்கருத்தரங்கில் இந்துஸ்தான் நிறுவனங்களின் இரண்டாம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மாணவர்கள் பங்கேற்று ஏ.ஐ-யின் நெறிமுறை மற்றும் சமூக தாக்கங்கள் மற்றும் மனித குலத்தை மேம்படுத்தும் திறன்கள், அத்துறையின் தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இவர், இந்துஸ்தான் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். இந்நிகழ்ச்சி, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது மட்டுமல்லாமல், எதிர்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் தொழில்துறை தொடர்பான அறிவையும் அவர்களுக்கு அளித்தது.
“இந்த அமர்வு உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் சரியான கலவையாகும், ஏஐ மற்றும் இயந்திர கற்றலில் எதிர்காலத் தலைவர்களாக மாணவர்களின் பயணத்தில் உதவுகிறது” என்று டாக்டர். ஜே.ஜெயா கூறினார்.