டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி, மும்பை வித்யாலங்கார் தகவல் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து, கல்லூரியின் உள்தர தரவு மையத்தின் ஆதரவுடன் “நிலையான வளர்ச்சி மற்றும் மாறிவரும் கணினி யுகத்தின் புத்தாக்கம் மற்றும் மாற்றம்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை(23.1.2026) நடைபெற்றது.

1 15

இந்த கருத்தரங்கில் கல்வி, அரசியல், தொழில், வேளாண்மை, சுகாதாரம், ஊடகம் உள்ளிட்ட பல துறைகளில் நிகழ்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து பன்னாட்டளவிலான கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரைகள் வழங்கினர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ச்சி, அனைத்துத் துறைகளிலும் கணினிமயமாக்கல், கணினிப் புரட்சி போன்ற கருப்பொருள்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

2 18

கருத்தரங்கின் முதல் நாளில் தென் கொரியாவின் கியங்பூக் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷியாமளாதேவி முனுசாமி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து உரையாற்றினார். மேலும், என்.ஐ.டி. வாரங்கல் பேராசிரியர் டாக்டர் சரீன் ராஜூ “நிலையான குறைகடத்தும் சங்கிலிகள்” என்ற தலைப்பில் விளக்க உரை வழங்கினார்.

3 15