சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கோயம்புத்தூர் கார்பரேட் கிளை கனரா வங்கியின் துணை மேலாளர் சிவக்குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பேசுகையில்: ஒரு ஜனநாயக நாடாக, விவசாயம், தொழில், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் இன்று வளர்ந்துள்ளோம். தொழில்நுட்பம் வளர்ந்து, எல்லாமே தானியங்கி மயமாகி வருவது பாராட்டத்தக்க விஷயம். அதே சமயம் மனிதநேயம், சுய ஒழுக்கம் வலுப்பெற வேண்டும்.

எங்கு பார்த்தாலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. பாதுகாப்பிற்காக அதைப் பயன்படுத்துகிறோம். சிசிடிவி அதிகரிக்கும் போது, சுய நம்பிக்கையையும், நேர்மையையும் இழந்து வருகிறோமோ என்று தோன்றுகிறது.
ஒரு கேமரா நம்மைப் பார்க்கிறது என்றால் ஒரு மாதிரி நடந்து கொள்கிறோம்; கேமரா இல்லை என்றால் வேறு மாதிரி நடந்து கொள்கிறோம். யாரும் பார்க்காத நேரத்திலும், நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தேசப்பற்று. கல்வி என்பது வெறும் அறிவை மட்டும் தருவதல்ல; அது நல்ல ஒழுக்கம், நம்பிக்கை, தைரியத்தை தர வேண்டும் என்று பேசினார்.
பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
