கோவை சசி கிரியேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான ஸ்டெல்லர் நட்சத்திர விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் சாமிநாதன், தலைவர்ராஜ் தீபன், கட்டிடக்கலைத்துறை முதல்வர் ரஞ்சித் குமார், வடிவமைப்பு துறைமுதல்வர் ராகுல் ஜித்தன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும், சிறப்பு விருந்தினர்களாக கட்டடக்கலை நிபுணர் பவுலர், பிலிப் ஆர் ஜே பவுலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 10

இதைத்தொடர்ந்து, ஐந்து பிரிவுகளில் கட்டிடக்கலையில் சாதனை புரிந்த ஐந்துகட்டடக்கலை நிபுணர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.பின்பு,நான்கு பிரிவுகளில் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளை மகாவீர் அசோக் ஜெயின் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், கட்டிடக்கலை துறை நிபுணர்கள் கல்லூரி பேராசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.