சக்தி தகவல் மேலாண்மைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிமுக வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா வரவேற்புறை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக கோவை மேலாண்மை சங்க தலைமை நிர்வாகி மற்றும் ஃப்ளோ லிங்க் சிஸ்டம்ஸ் பி லிமிடேட் தலைவர் நித்யானந்தன் தேவராஜ் கலந்துகொண்டு பேசியதாவது: மேலாண்மை கல்வி ஒரு கலை. ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப தலைவிகளாக உள்ள தய்மார்களே முதன்மையான மேலாளர் ஆவார். மேலும் மனிதர்களை மதித்து நடக்கும் பண்பு வேண்டும். நல்ல மனிதரே நல்ல தலைவராகிறார். நாட்டு நடப்பு மற்றும் பொருளாதாரத்தை அறிந்துகொள்ள தினமும் செய்தித் தாள் படிக்க வேண்டும். கல்வியை மகிழ்ச்சியாக சந்தோசமாக கற்க வேண்டும் எனக் கூறினார்.
