டாக்டர் ஆர்.வி. கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையேற்றார். இணை நிர்வாக அறங்காவலர்கள் சபீதா ராமகிருஷ்ணன், லக்ஷ்மி பிரவீணா, காயத்ரி சிவகுமார் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் ரூபா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் குரேஷி, சரத் மற்றும் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி பாடகர்கள் ஸ்வேதா, சரண் கலந்து கொண்டு பாடல்களும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் வழங்கி மாணவர்களை உற்சாகமூட்டினர்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் சிறப்பு சேர்த்தன. நிர்வாக மேலாளர் மனோகரன், துணை முதல்வர்கள் சண்முகப்பிரியா, தேவப்ரியா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். விழாவின் ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் சித்ரா ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.