சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை கருமத்தம்பட்டியில் நடத்தினார்கள்.

இந்த பேரணியில், சாலைப் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்ட முக்கிய அம்சங்களாக தலைக்கவசம் அணிதல் மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் முன்னணி விளக்குகளில் பிரதிபலிப்பு தடுப்பான்களை ஒட்டுதல் ஆகியவை வலியுறுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பான சாலைப் பயணத்தை மேற்கொள்வதற்கும், சாலை விதிகளை மதிப்பதற்கும் சாலை விதிகளை மதிப்பேனென்றும் உறுதிமொழி எடுத்தனர்.