நுண்ணுயிர் உயிரி உரங்கள் தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றிக் கொள்கின்றனர் முதல்வர்  பாலசுப்பிரமணியன் மற்றும் தீசன் ஆர்கானிக் ஃபார்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஞான சரவணன்.

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் கேரளாவின் தீசன் ஆர்கானிக் (கரிம) ஃபார்ம்ஸ் ஆகியவை நுண்ணுயிர் உயிரி உரங்கள், நிலையான விவசாயம் மற்றும் கரிம கழிவு மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சீனிவாசன், முதல்வர்  பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ், மற்றும் தீசன் ஆர்கானிக் ஃபார்ம்ஸ் உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஞான சரவணன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இது, மாணவர்களுக்கும் விவசாயத் துறையினருக்கும் பயனளிக்க மட்டுமல்லாது, கரிம வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றங்களை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.