பழனி, நியூ தாராபுரம் சாலை, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரும் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழத் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருமான சுப்பிரமணியன் ஷோரூமை திறந்து வைத்தார். சித்தனாதன் & சன்ஸ், சிவனேசன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பழனி, தலைவர் சரவணன் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர் நாகராஜன் முன்னிலை வகித்தார். திருப்பூர் ஹீரோ ஃபேஷன் சுந்தரமூர்த்தி, வாடிக்கையாளர்கள் கலந்துக் கொண்டனர்.
