கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் செவ்வாய்(13.01.2026) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரி செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா முன்னிலை வகித்தனர். மேலும், துணை முதல்வர், தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர், புலமுதன்மையர்கள், என அனைவரும் விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்தனர்.
அனைத்துத் துறையின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்தனர்.
பாரம்பரிய உடையணிந்து மாணவியர் பொங்கல் விழாவுக்குச் சிறப்பு செய்தனர். மாணவியரின் கும்மியாட்டமும் நடைபெற்றது. பின்னர், அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
