அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இந்த வார இறுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் 18ம் தேதி (சனிக்கிழமை) கோவை கொடிசியா மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுக் கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இந்த நிகழ்விற்கான ஆயத்த பணிகள் இன்று துவங்கின. தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பந்தல் கால் நடும் நிகழ்வில் பங்கேற்றனர்.
