இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் 7 நாட்கள் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் மோப்பேரிபாளையம் பேரூராட்சி கிராமத்தில் மார்ச் 11 முதல் 17 வரை நடைபெறுகிறது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மோப்பேரிபாளையம் பேரூராட்சி தலைவர் உயிர் சசிக்குமார், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கிராம மக்களுக்கு பயனளிக்கும் சமூக சேவைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த முகாம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
