கோவை சுங்கம் பைபாஸ் சாலை அருகில் உள்ள சர்வீஸ் சாலையை விரிவுபடுத்தி, தார்ச்சாலை அமைத்துத் தர அப்பகுதியில் பொதுமக்கள் கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா. கார்த்திக்கை எக்ஸ்.எம்எல்ஏ., நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததை யொட்டி, அவர் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.
உடன், சிங்காநல்லூர் பகுதி -3 துணைச் செயலாளர் பாரதிநகர் செல்வம், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி மேகனாதன் MC., 84 வட்டக் கழகச் செயலாளர் அமானுல்லா,மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு அமைப்பாளர் இலா. தேவசீலன்,அவைத் தலைவர் முத்துக்குமார், துணைச் செயலாளர் அந்தோணி அலோசியஸ்,ஜெ.பாபு, பொன்னார், நாகராஜ்,ராமு,ஜெகதீஷ்,வி.லட்சுமணன், கமலக்கண்ணன்,ஜெயப்பிரியா, பைபாஸ் செந்தில், கோவிந்தராஜ்,கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் உடனிருந்தனர்.