நிர்மலா மகளிர் கல்லூரியில் பேரூராதீனம் 24 ஆம் பட்டம் திருப்பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி பபியோலா விழாவிற்கு தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக பேரூராதீனம் 25வது பட்டம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்துகொண்டு, சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர அடிகள் தமிழிலுள்ள அற இலக்கியங்களின் சிறப்பினை எடுத்துரைத்து பேசினார்.
கணபதி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சண்முகப்பிரியா பாரதி, பேரூர் தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் மனோன்மணி, கொங்கு நாடு தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் கருத்தரங்க செயலாளர் மேகா சக்தி பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
