நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஇ மற்றும் பி.டெக் வகுப்புகளின் தொடக்க விழா நடைபெற்றது.
நேரு கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான கிருஷ்ணகுமார், விழாவை தொடங்கிவைத்து பேசுகையில்: ஒரு நாளில் அனைவருக்கும் 24 மணிநேரமே இருந்தாலும், தினமும் ஐந்து நிமிடங்கள் சுய முன்னேற்றத்திற்காக செலவழித்தால் அதிசயமான வளர்ச்சி பெறலாம். வெற்றி உடனடி சாதனை அல்ல, அது மெதுவாகவும் நிலையான முறையிலும் கிடைக்கும் என்றார்.
சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் மதுரை ராமகிருஷ்ணன் பேசுகையில்: மாணவர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும். மாணவர்களின் வாழ்க்கை வெளிச்சமாய் திகழ முயற்சி மற்றும் செயலும் வேண்டும். மாணவர்கள் தங்கள் உண்மையான திறனையும், பொறுப்பையும் உணர வேண்டும் எனப் பேசினார்.
கெளரவ விருந்தினர் அப்வியூஎக்ஸ் நிறுவனத்தின் திறமை மற்றும் கலாச்சாரம் உதவி மேலாளர் பிரியதர்ஷினி ராஜசேகரன் பேசும்போது: பதட்டம் பலவீனம் அல்ல, அது ஒருவரை விழிப்புடன் வைத்துக் கொண்டு சிறந்த முறையில் செயல்படச் செய்கிறது. கல்லூரி வாழ்க்கையின் முதல் ஆண்டு நான்கு ஆண்டுகளுக்கான அடித்தளமாக இருப்பதால் அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்வில் நேரு கல்விக் குழுமத்தின் செயல் இயக்குனர் நாகராஜா, கல்லூரி முதல்வர் சிவராஜா, அறிவியல் மற்றும் மனிதவளவியல் துறை தலைவர் ஜெயபிரகாஷ், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
