கருமத்தம்பட்டி பதுவம்பள்ளியில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் 2024 – 25 ஆம் கல்வியாண்டில், நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “ஹாப்பி ட்ரெய்ல்ஸ் கேம்ப்” என்ற இரண்டு நாள் முகாம் பள்ளியில் நடைபெற்றது.
மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இம்முகாமில் பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், சமூக ஒருங்கிணைவையும், தன்னைத்தான் பராமரிப்பதையும் கற்றுக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டது.
முதல் நாளன்று, ஆர்வமூட்டும் விளையாட்டுகளுடன் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடப்பட்டு, கலைப் பொருட்கள் செய்யப்பட்டது. இரவு நேரத்தில் சுடரொளியில், மாணவர்கள் உற்சாக நடனமாடினர். இரவின் நிழலில் நிலாச்சோறு உண்டு நீங்கா நினைவுகளைப் பெற்றனர். பின்னர், தங்களுக்கென அமைக்கப்பட்ட கூடாரங்களில் மாணவர்கள் தம் நண்பர்களுடன் இரவுப் பொழுதை இனிமையாக்கினர்.
இரண்டாம் நாளன்று உணவுப் பொருள்களின் உன்னதம் அறியவும், பணத்தின் மதிப்பறியவும் மாணவர்கள் வாரச்சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதிய உணவிற்குப்பின், மாணவர்களுக்குப் பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமின் இந்நிகழ்வுகள் அனைத்தும் பள்ளி நிர்வாகத்தின் தலைமையில், முதல்வர் நிர்மலா, ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா ஆகியோர் வழிகாட்டலின்படி, ஆசிரியர்கள் நெறிப்படுத்தலுடன் நிறைவு பெற்றது.