இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், ஸ்பைடர் என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது.

தலைமை விருந்தினராக ஆஸ்திரேலியாவின் ரியல்போட் ஏஐ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி அனில்குமார் கலந்து கொண்டார்.

hicas 3 1

நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக இருந்து ஊக்கமளித்து வரும் எட்டு மாணவர்களின் தாய்மார்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், மின் கழிவு கண்காட்சி நடைபெற்றது.

hicas 4

கருத்தரங்கில் ஐடியாதன், டீபக்கிங், பிஸ் மாஸ்டர்ஸ், வலை வடிவமைப்பு, காகித விளக்கக்காட்சி, போஸ்டர் வடிவமைப்பு உள்ளிட்ட மொத்தம் எட்டு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 550 மாணவர்கள் கலந்து கொண்டனர்.