பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இன்ஃபைண்ட் இணைந்து நடத்திய ‘எய்ம் 25’ என்ற 36 மணி நேர தேசிய அளவிலான ஹேக்கத்தான் சனிக்கிழமை நிறைவடைந்தது.

நிறைவு விழாவில், கற்பகம் பொறியியல் கல்லூரி, எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட கல்லூரிகளாக அங்கீகரிக்கப்பட்டன.
இதில், கற்பகம் பொறியியல் கல்லூரி முதல் பரிசைப் பெற்று, ரூ.25,000 ரொக்கப் பரிசுத் தொகை, இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பெற்றது.
நிகழ்வில், ஆராய்ச்சி மற்றும் புதுமைத் துறை டீன் ராமகிருஷ்ணன், மாணவர் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் சுதாகர், இன்ஃபைண்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஹரிஷ் பிரவீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
