தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர், தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலின் திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வட்டங்கள் தோறும் வட்டக் கழக கூட்டங்கள், 16 பகுதி கழக பொது உறுப்பினர் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
முதல்படியாக, வட்ட கழகங்களிலும், பகுதி கழகங்களிலும் கூட்டங்கள் நடைபெறும் பொழுது அந்தந்த வட்டங்களுக்கு, பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இரண்டாவதாக, பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கூட்டம் நடைபெறும் இடம், நாள், தேதி, நேரம் போன்றவற்றை முறையாக அச்சிட்டு சுற்றறிக்கை மூலம் அப்பகுதி தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் அனைத்து நிர்வாகிகள்,பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள் மற்றும் கழக பொது உறுப்பினர்கள் என அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு வட்டங்களிலும், கழக உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து கழக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அளித்து தகவல் தெரிவிக்கவும். மேலும், மேற்காணும் நடைமுறைகளை பின்பற்றி வட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டங்கள் நடைபெறும் விபரம்
சிங்காநல்லூர் பகுதி-1 க்கு உட்பட்ட வார்டு எண்- 55- 24.08.2024 – மாலை 5.00 மணி- ஏ.ஆர்.எஸ். மஹால்,வார்டு எண் – 56- 26.08.2024 மாலை 6.00 மணி செங்கோடம்மன் கோவில் மண்டபம், வார்டு எண்-57- 23.08.2024 – மாலை 5.00 மணி- எஸ்.வி.எஸ் மஹாலில், வார்டு எண்-58 – 25.08.2024- மாலை 5.00 மணி- விக்னேஷ் மஹாலிலும் நடைபெறவுள்ளது.
மேலும், பீளமேடு பகுதி-3 க்கு உட்பட்ட வார்டு எண்- 50 மாலை 6.00 மணி – என்.ஜி.ஆர் வீதி, உடையாம் பாளையம் வார்டு எண்- 51- 3.9.2024- மாலை 6.00 மணி – சமூக கூடம், சௌரிபாளையம் அகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
வடக்கு தொகுதி வடவள்ளி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண்- 36 வார்டு அலுவலகம், வார்டு எண்- 37 24.08.2024 மாலை 5.00 மணி மருதம் ஸ்போர்ட்ஸ் கிளப், வார்டு எண்- 38- 25.08.2024- காலை 10.00 மணி- வார்டு அலுவலகம், வார்டு எண்- 39 – 25.08.2024 மாலை 5.00 மணி – வார்டு அலுவலகம், வார்டு எண்- 40- 25.08.2024- மாலை 7.00 மணி- காஸ்மோ வில்லேஜ், பொங்காளியூரில் நடைபெற உள்ளது.
பாப்பநாயக்கன் புதூர் பகுதிக்கு உட்பட்ட வார்டு எண்- 41- 22.08.2024- மாலை 7.00 மணி- திமுக அலுவலகம், பிஎன் புதூர்.
வார்டு எண்- 74- 23.08.2024- மாலை 7.30 மணி- சமுதாயக்கூடம், பூசாரிபாளையம் வார்டு எண்- 75 23.08.2024- மாலை 6.00 மணி மற்ற பகுதிகளின் சுற்றறிக்கை பட்டியல் தயார் செய்து தெரிவிக்குமாறு பகுதி கழக செயலாளர்கள் மற்றும் வட்டக் கழக செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ அறிவித்தார்.