கோவை இராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலை, ஸ்ரீ பதி நகர்  நலவாழ்வு சங்கத்தினரையும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்பகுதியில் தனியார் செல்போன் கம்பெனி புதிய செல்போன் டவர் அமைப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உதவிட‌ வேண்டும் என்ற கோரிக்கையின் மீது, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று  உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில், ஸ்ரீ பதி நகர் நலவாழ்வு சங்க தலைவர் மனோகரன், ஜாய்ஸ் மால், ஈஸ்வரமூர்த்தி, நலவாழ்வு சங்க நிர்வாகிகள், ஸ்ரீபதி நகர் வாழ் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.