கோவை இ.எஸ்.ஐ.ரோடு, பாலசுப்பிரமணியாமில்ஸ், லைன்ஸ் டாப் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில்‌ நடைபெற்ற, ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் பூஜா கமிட்டி 20 ஆம் ஆண்டு திருவிழாவில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, புகழ் பெற்ற கேரள கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய சுவாமி ஐயப்பன் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் பூஜா கமிட்டி தலைவர் நந்தகுமார், செயலாளர் சிவகுமார், மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார்,54 வது வட்டக் கழகச் செயலாளர் கே.ஆனந்தகுமார், வட்டக் கழக துணைச் செயலாளர்கள் 53 ராமதாஸ், 54 பி.எஸ்.என்.எல்.ராஜேஷ்குமார், ஸ்ரீ‌ கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வி. லட்சுமணன்,திரளான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.