நவராத்திரியை  முன்னிட்டு, மிருதங்க மா மேதை கணபதி ஐயர் நினைவு நவராத்திரி இசை விழா கோவை ஏரோட்ரோம்  பூம்புகார் நகரில் 4  நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மூத்த சங்கீத வித்வானும், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வருமான கே.  சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

isai 2

முதல் நாள் நிகழ்ச்சியில் ஆனந்த் (பாட்டு) , முரளி ரங்கராஜன் (பாட்டு) குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் செல்வி விஜயஸ்ரீ, ராஜா ரங்கநாதனின் இசைக்  கச்சேரி நடைபெற்றது.  மூன்றாம் நாள் முதல்  நிகழ்ச்சியில் ஹரிஆதஷ் (பாட்டு)  ஆனந்த் (வயலின்) , பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோரின் இசைக்  கச்சேரி நடைபெற்றது.  மேலும், நகுல் கிருஷ்ணன்(பாட்டு),  ஆனந்த் (வயலின்)  ஜெயப்பிரகாஷ் (மிருதங்கம் ) ஆகியோரின்  இசைக்கச்சேரி நடைபெற்றது.  இதில் மிருதங்க மா மேதை சிஷ்யர்கள் கடம்  வித்வான் மோகன்ராம்,கோவை பிரகாஷ், கோவை சுரேஷ்,  சுந்தரம், ஜெயபிரகாஷ்,  உள்ளிட்ட 30 க்கும்  மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.