ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், சீன ஆய்வு மையம், சென்னை சென்டரும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்  சுந்தர், கல்லூரி முதல்வர் சித்ரா, சீன ஆய்வு மையத்தின் சென்னை சென்டரின் இயக்குநர், ஜெனரல் கமாண்டர் வாசன், மூத்த ஆய்வு அலுவலர் அனுந்த்ரா ரங்கன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நாடுகளுக்கிடையிலான பன்முகப் பண்பாட்டுப் புரிதலை வலுப்படுத்துவதோடு கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பும் ஈடுபாடும் ஏற்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சீனாவில் தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கருத்தாக்கங்கள் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் சீன ஆய்வு மையத்தின் சென்னை சென்டர் உறுப்பினர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவியர் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர்.

கருத்தரங்கம் பல பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கட்டுரையாளர் விருது மற்றும் தொலைநோக்கு ஆராய்ச்சியாளர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.