எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய அளவிலான மேலாண்மைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் கொங்கு மண்டலத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வை சேரன் அகாடமியின் நிறுவனர் ஹுசைன் அக்மட் தொடங்கி வைத்தார். பல்வேறு போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ரூ.1.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன், தொழில்நுட்ப வளாக இயக்குநர் அருணாசலம், நிர்வாக துணை முதல்வர் தமிழ்செல்வம், பாடத்திட்ட துணை முதல்வர் விவேகானந்தன் மற்றும் மேற்படிப்புத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் பங்கேற்றனர்.
