பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் சூலூர் விமானப்படைத் தளத்தின், விமான படை அதிகாரி விங் கமாண்டர் பற்குணன் கலந்துகொண்டார். தேசிய மாணவர் படை மாணவர்களால் வாரியர் அணிவகுப்பு, என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்துகொண்டனர்.
