கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ விநாயகர், தையல் நாயகி உடனுறை வைத்தீசுவரசுவாமி, முத்துக்குமாரசுவாமி, தன்வந்திரிப் பெருமாள் கோயிலுக்கு திருநெறிய தெய்வத்தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) நடைபெற்றது.

இதில் சாந்தலிங்க இராமசாமி அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகளார், இராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிசாமி, செயல் இயக்குநர் அருண் பழனிசாமி மற்றும் இயக்குநர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.