கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி -1 திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வ.உ.சி. காலனி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற, கைப்பந்து போட்டிகளைத் தொடங்கி வைத்து, கைப்பந்து போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் விளையாட்டு வீரர்களை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,வாழ்த்தினார்.
பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டக்கழகச் செயலாளர்கள் 26 வது வார்டு மாடசாமி,24 வது வார்டு நடராஜ், பகுதிக்கழக நிர்வாகிகள் துரைசாமி,கிரீன்வே சுப்பிரமணியம்,ஏ.டி.காலனி ரவி, டி.எம்.மணி,ஜெயராஜ் , செல்வராஜ்,லட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.