கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பானது கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். சரவணன் ஆகியோர் ஊரக வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.  இதில், உன்னத் பாரத் அபியான் கோயம்புத்தூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் பங்கேற்று கிராமங்களுக்குச் சேவை செய்வதற்கான பல்வேறு வழிகள் குறித்து யோசனையை வழங்கினார்.

மேலும் தொழில்நுட்ப வளர்ச்சி, விவசாயம், நீர் மேலாண்மை  , சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் அதன் முக்கியத்துவம் குறித்தும், கே.பி.ஆர் நிறுவனம் செய்த பல்வேறு வகையான பணிகளைக் குறித்தும் அவர் விளக்கினார், மேலும் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் பணியாற்றவும், மேம்படுத்தவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்களை ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஊஞ்சப்பாளையம் அரசு பள்ளியில் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறிப்பிடப்பட்டன.