கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தலைமை விருந்தினராக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கோவை வனப்பிரிவு வனத்துறை அதிகாரி ஜோதிர்லிங்கம் கலந்துகொண்டார். குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கே.பி.ஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் கீதா கலந்துகொண்டனர்.
