கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் 18ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
கண்காட்சியில், பண்டிகை காலங்களுக்கு ஏற்ற நகைகளும், திருமணங்களுக்கு ஏற்ற வகையிலான கைதிறன் கொண்ட நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய பாரம்பரியத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கலாஷா நிறுவனத்தின் இயக்குநர் ஆஷிகா சந்தா, உரிமையாளர் ஷ்ரவன் குமார் கூடூர் ஆகியோர் துவக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். டெர்ன்ஸ் காயு ஹோம் ஃபுட்ஸ் இயக்குனர் காயத்ரி சுரேந்திரன், அத்வல்த் ரியல்டி பி.வி.டி இயக்குனர் சுஜாதா விஜயசேகரன், எஸ்எஸ்டி கலர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கருணாப்ரியா, சுகுணா நிறுவனங்கள் துணைத் தலைவர் சாந்தினி அனிஷ்குமார், மிர்ராஸ் காப்பி இந்தியா இயக்குனர் வள்ளிமயில் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மணப்பெண் நகைத் தொகுப்பில், கோயில் நகைகள், வைரம் பதித்த நகைகள், பாரம்பரியம் நிறைந்த மணப்பெண் அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன.
