கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுப்டக் கல்லூரியின் ‘கே.பி.ஆர் பன்னாட்டு மையம்’ மற்றும் இலங்கையின், உளவியல் திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, ‘நரம்பியல்-மொழியியல் நிரலாக்கம் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மற்றும் விளக்கக்காட்சி திறன்கள்’ குறித்த சர்வதேச மாஸ்டர் பயிற்சி நிகழ்ச்சி பத்து நாட்கள் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா, கே பி ஆர் பன்னாட்டு மையத்தின் இயக்குனர் மணிகண்டன், வழிகாட்டுதலின்பேரில், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் நிகழ்ச்சி தலைவர் பாபு ரங்கராஜன் மற்றும்  இலங்கை பிரதிநிதி அனூர ரஞ்ஜித் குமார ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .

இலங்கையைச் சேர்ந்த 26 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதிநாளில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.