ஜூபிடர் டிராவல் எக்சிபிஷன் நிறுவனம் சார்பில் சுற்றுலா துறை சார்ந்த வணிக நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவை தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது.
வியட்நாம், தாய்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், பூட்டான், பாலி, மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். புதிய தொழில் வாய்ப்புகளை ஆராயவும், சுற்றுலாத் துறையின் நவீனப் போக்குகளை அறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
பல்வேறு இடங்களுக்கான பிரத்யேகப் பயணத் தொகுப்புகள், ஓட்டல் கூட்டாண்மைகள் மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் பல்வேறு கண்காட்சியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தமிழ்நாடு பிரிவின் தலைவர் அசோக் குமார், ராதாகிருஷ்ணன், பஞ்சரவதனம் ராதாகிருஷ்ணன், இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தமிழ்நாடு பிரிவின் செயலாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
