இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பயோசமிட் 2026 என்ற தேசிய மாநாடு நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாகச் செயலாளர் பிரியா ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
தொடக்க உரையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி பேசுகையில்: மண் வளத்தை மேம்படுத்துதல், பயிர் உற்பத்தித்திறனை பெருக்குதல் மற்றும் காலநிலைக்கு ஏற்ற விவசாய அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் மண் நுண்ணுயிரிகளின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். நீண்டகால மண் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் நிலையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நுண்ணுயிர் அடிப்படையிலான உத்திகள் அவசியம் என்று வலியுறுத்தினார்.

பாரதியார் பல்கலைக்கழக வளாகம், டிஆர்டிஓ டிஐஏ சிஓஇ இணை இயக்குநர் கதிர்வேலு, மண் சுற்றுச்சூழல் அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதில் மேம்பட்ட நுண்ணுயிர் ஆராய்ச்சி மற்றும் அதன் முக்கியப் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
மாநாட்டில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவர் ராஜலட்சுமி, நுண்ணுயிரியல் துறைத் தலைவர் லாலி க்ரௌதர், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 500 பேர் பங்கேற்றனர்.
