இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழக அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

போட்டியில் சுமார் 30 கல்லூரிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். 60, 65, 70, 75, 80, 95, 90, 90+ கிலோ உடல் எடை பிரிவுகளைக் கொண்டு நடத்தப்பட்டது. ஒவ்வொரு எடை பிரிவிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு இந்துஸ்தான் கல்லூரியின் சார்பாக பதக்கங்களும், சுழற்கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் சாம்பியன் பட்டத்தை இந்துஸ்தான் கல்லூரி வென்றது.

பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். போட்டியில் இந்துஸ்தான் கல்லூரியின் செயலாளர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர்  பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.