பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பிரகாசன் வரவேற்புரையாற்றினார்.

மின்னணு மற்றும் தொடர்புடைய பொறியியல் துறைகளின் கீழ் வரும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல், மின்சார மற்றும் மின்னணு பொறியியல், ஃபேஷன் தொழில்நுட்பம், கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல், ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி பொறியியல், மற்றும் நெய்தல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக இந்திய மேலாண்மை நிறுவனம், போத் கயா, பீகார் மாநிலத்தின் இயக்குநர் பேராசிரியர் வினிதா சிங் சஹாய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 492 மாணவர்கள் பட்டதாரி சான்றிதழ்களை பெற்றனர். ஒவ்வொரு துறையின் முதல் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

