ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாடத்திட்டங்களையும், வகுப்பறையையும் கடந்து மற்றவர்களோடு நல்லுறவுகளைக் கடைபிடிக்கும் வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் ஃப்யூஷன் ஃபியஸ்டா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

மீம் உருவாக்குதல், மியூசிக்கல் சேர், ஸ்டேண்ட்அப் காமெடி, ட்ரெஷர் ஹண்ட், ரீல்ஸ் உருவாக்குதல், கனெக்ஷன் கேம்ஸ், எண்ட்ரப்ரனெர் கார்னர், ஆர்ட் எக்ஸ்பிஷன், மியூசிக் கான்சர்ட், ஃப்ளேஷ் மாப் என ஆரவாரவாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் சித்ரா இதுபற்றிக் கூறும்போது: எப்போதும் படிப்பு, பலவிதமான பயிற்சிகள் என்று தொடரும் சூழலில் மாணவிகளை உற்சாகப்படுத்தவும் புத்தகங்களைக் கடந்து வாழ்வியல் பயிற்சிகளைத் தரும் வகையில் அனைத்து மாணவிகளும் மற்றவர்களோடு சேர்ந்து நட்பாகப் பங்கெடுக்க வாய்ப்பாக இந்த நாளைத் திட்டமிட்டிருந்தோம்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் பிற துறை சார்ந்த மாணவிகளோடு இணைந்து பங்கேற்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தோம். இதனால் மாணவிகளுக்கிடையில் புரிதலும் நட்புணர்வும் அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது எனத் தெரிவித்தார்.