டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்குழு மற்றும் கோவை அறம் அறக்கட்டளையின் சார்பில் முதலுதவி தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அறம் அறக்கட்டளையின் நிறுவனர் ரகுராம் பேசுகையில்: கல்லூரிப் பருவத்தில் மாணவர்கள் முதலுதவி செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பேரிடர் காலத்தில் மாணவர்களின் பங்களிப்பு, செயல்பாடு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் அமர வைக்கும்.
முதலுதவி பற்றிய பாடப் பகுதியை பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்களின் கற்றல் திறனையும், சமூக மதிப்புடன் கூடிய மனிதநேயத்தையும் வளர்ச்சி அடையச் செய்யலாம் என்று பேசினார்.
நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சரவணன், செவிலியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் மாதவி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
