கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை சார்பில், கல்லூரிகளுக்கிடையேயான எலெகன்சா 26 எனும் கலைவிழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை தாங்கினார்.

WhatsApp Image 2026 02 20 at 10.15.11 AM

சிறப்பு விருந்தினர்களாக ஃபேஷன் வடிவமைப்பாளர் மற்றும் நடன அமைப்பாளர் அருண் பாலகிருஷ்ணா, ஃபேஷன் வடிவமைப்பாளர் மற்றும் டிரெண்ட் ஃபோர்காஸ்டர் வர்ஷா, நூலின் கதை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர் கெளஷிகா குமரேசன் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் சிகையலங்காரம், முகவோவியம், நக அலங்காரம், லோகோ உருவாக்கம், மெஹந்தி, பாரம்பரிய ஆடைக்கண்காட்சி மற்றும் அணிவகுப்பு, மறுசுழற்சிப் பொருட்கள் உருவாக்கம், கலைத்திறனுடன் கூடிய நிபுணத்துவ வெளிப்பாடு எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு விருதுகளும், 50,000 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டன. 30 கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் கலந்துகொண்டனர்.