சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியி்ல் போதைப் பொருள் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. நிகழ்வில் கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் கீதா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவுத் துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி கலந்துகொண்டு போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பு பற்றி மாணவர்களிடையே பேசினார்.
ராகோக் மெடிகேர் நிறுவனத்தின் இயக்குநர் நீல் கிகானி, போதைப்பொருள் பயன்பாட்டினால் இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்த குடும்பங்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன எனக் கூறினார்.
கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் சே நோ டூ டிரக்ஸ் எனும் எழுத்து வடிவில் நின்று, போதைப் பொருள் இல்லாத சமூகமாக இச்சமூகம் உருவாகவேண்டுமென்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
