கோயம்புத்தூர் அறம் ரோட்டரி சங்கம், ரிவர்சைடு பப்ளிக் பள்ளியுடன் இணைந்து, 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ரோட்டேரியன்களுக்கான ‘ஐஸ்வர்யம் பைனான்சியல் சர்வீசஸ் கப்’ என்ற பிரத்தியேக கிரிக்கெட் போட்டியினை நடத்தியது.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்திரன் போட்டியினை துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அறம் தலைவர் ஸ்ரீராம், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அறம் செயலாளர் ரஜீல் அப்துல் ரஹ்மான், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சந்திரமௌலி, மற்றும் கலந்துகொண்டனர்.
கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளின் நலனுக்காக வழங்கப்படும்.
