நிர்மலா மகளிர் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதனை கல்லூரி செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா தொடங்கி வைத்தனர்.

சிறப்பு சொற்பொழிவிற்கு முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மகிழ்ச்சி வானொலி நிலையம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் நிர்மலா மகளிர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் 57 பேர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வு மலரில் வெளியிடப்பட்டது. ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவிகளையும் பேராசிரியர்களையும் ஊக்கப்படுத்தி அதிக எண்ணிக்கையிலான ஆய்வுக் கட்டுரைகளை ஒருங்கிணைத்து வழங்கியமைக்காகத் தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரிக்கு இந்தியன் ஐகான் விருது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது.

சிறப்புச் சொற்பொழிவில் படைப்பும் படைப்பாக்கமும் என்ற தலைப்பில் முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற மீனாட்சி பேசுகையில்: படைப்பு கலை அனைவருக்கும் வந்து விடாது. படைப்பாக்கக் கலையின் மூலமே மொழியினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். படைப்பாக்கம் மொழியின் முதுகெலும்பு போன்றது. அதனை வலிமையாக்க வேண்டும் என்றால் இன்றைய இளைய தலைமுறையினர் படைப்பு ஆக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனப் பேசினார்.