கோவை வடக்கு தொகுதியில் இம்முறை அதிமுக வேட்பாளராக களமிறங்கப்போகும் வேட்பாளர் வடவள்ளி சந்திரசேகர் ஆக தான் இருக்கமுடியும் என எதிர்பார்த்த வந்த ஒருவர், அவ்வாறு நடைபெறாமல் போனதால்  தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவாக வெளிப்படுத்தி இருந்தார்.

இதை சந்திரசேகரின் மனைவியும் கோவை மாநகராட்சி வார்டு 38ன் கவுன்சிலருமான ஷர்மிளா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அது பின்வருமாறு :-

ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கும் கோவை வடக்கு தொகுதியின் வேட்பாளர் யார் ???”

ஆம் மருதமலை முருகன் குடியிருக்கும் கோவை வடக்கு தொகுதி, தமிழக அரசியலில் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.”

கொங்கு மண்டலத்தின் பிரதானமான 10 தொகுதிகளில் கோவை வடக்கை கைப்பற்றிட எனக்கு, உனக்கு என அனைவரும் போட்டி போட காரணம் என்ன ???”

இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தகுதி இருந்தும், கட்சிக்காக விட்டுக் கொடுத்த ஒரு இளைஞரின் 25 வருட உழைப்பு அங்கே சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளது. வெற்றிக்கான வாய்ப்பும் அங்கே கனிந்திருக்கிறது”.

அவர்தான் Er.சந்திரசேகர், “வடவள்ளியின் விடிவெள்ளி” என அப்பகுதி மக்களால் அன்புடன் “எங்கள் வீட்டு பிள்ளை” என ஒவ்வொரு இல்லத்துக்குள்ளும் மகனாய் சகோதரனாய் ஊடுருவியுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்த S.P.வேலுமணி அவர்களின் அன்புத் தம்பி என எல்லோராலும் அறியப்பட்ட இந்த முகம் தான் இந்த தொகுதியின் அடையாளம்.”

சென்ற சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தர்மத்திற்காக வானதி சீனிவாசனுக்கு தெற்கு ஒதுக்கிய போது தன் தொகுதியான வடக்கை மாவட்ட செயலாளர் அம்மன் கே அர்ஜுனனுக்காக விட்டுக் கொடுத்து தொகுதி முழுதும் அவருக்காக பிரச்சாரம் செய்து வெற்றி வேட்பாளராக சட்டசபை அனுப்பியவர் தான் Er.சந்திரசேகர்.”

இம்முறையாவது தங்கள் வீட்டு பிள்ளை தலைமை வகிக்க வேண்டும் என எண்ணி இருந்த மக்களுக்கும் அப்பகுதி அதிமுக கழக நிர்வாகிகளுக்கும் கோவை வடக்கு தொகுதி பாஜக-வுக்கு ஒதுக்கியது தலையில்  இடி போல் இறங்கியது.”

 

ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக என்னென்னவோ செய்து, எவ்வளவோ போராடும் பல கட்சியை சேர்ந்தவர்களை பார்த்திருப்போம், ஆனால் தன் 25 வருட உழைப்பை அப்பகுதியில் உள்ள மக்களுடன் மக்களாக வாழ்ந்த ஒருவர் இம்முறையும் தனக்கு வாய்ப்பில்லை என தெரிந்தும் இதுவரை ஒரு வார்த்தை பேசவில்லை, எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை !!! “

இன்று அறிவிக்கப்படும் பாஜக வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்கள் அறுவடை செய்யப் போவது Er.சந்திரசேகர் அவர்களது உழைப்பை தான்.”

தொகுதிக்குள் எங்கு தண்ணீர் வரவில்லை என்றாலும், சாலை வசதி இல்லை என்றாலும், அடிப்படை சுகாதார வசதிகளில் குறை என்றாலும், நேரடியாக இரவு பதினோரு மணிக்கும் உரிமையாக மக்கள் அழைத்து குறைகளை சொல்வதை பார்த்திருக்கிறோம்.

மறுநாள் அந்தக் குறைகள் மின்னல் வேகத்தில் சரி செய்யப்பட்டு இருக்கும், அந்த வேகம் தான் இந்த இளைஞரின் தனித்தன்மை…”

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

“இந்த அன்பு தம்பியின் பதிவு நெகிழ்ச்சி அளிக்கிறது,” என சர்மிளா தனது உணர்வை வெளிப்படுத்தி இருந்தார்.