டாக்டர்.என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகம் மற்றும் மேலாண்மையியல் துறையின் சார்பாக, “பணி 2030: தொழில்முனைவோரின் இதயம் & மனிதவள மனம்” குறித்த தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது. 700க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கல்லூரியின் செயலாளர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி தலைமையுரை வழங்கினார். எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்முனைவோரின்  முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாரம்பரியமான தொழில்களை மாற்றியமைக்கும் நிலை தற்போது வளர்ந்து வருவதைப் பற்றி பேசினார்.

NGP 2 2

இதில் தொழில்துறை வல்லுநர்களின் ஊக்கமளிக்கும் கருத்துரைகள் இடம்பெற்றன. சென்னை ஆரக்கிள் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி நாகரத்தினம், ஆர் பிளன்டர்ஸ் இன் நிறுவனர் ஸ்ரீ ராகுல் காமத், சீகர் ஸ்பின்டெக் எக்யூப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை மேலாளர் மாருதி, லியோ டேப்ஸ் & ஃபிட்டிங்ஸின் நிர்வாக பங்குதாரர் பார்த்திபன் ஆகியோர் பேசினர்.

டாக்டர்.என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், கல்வி இயக்குநர் முத்துசாமி, கல்லூரியின் முதல்வர் சரவணன், பேராசிரியர்கள், மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.