கோவை காட்டூர் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இன்று நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது, அவர் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். திமுக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகளை விளக்கமாக எடுத்துரைத்த அவர், சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆதரவாளர்கள் மலர் தூவியும் அவரை வரவேற்றனர்.தொடர்ந்து மூத்த திமுக நிர்வாகிகள் இல்லத்திற்கு சென்று ஆதரவு கோரினார்.

மேலும், பலரும் வேட்பாளருடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் தேர்தல் உற்சாகம் நிலவியது. இந்த பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.