கோவையில் மறைந்த முன்னாள் எம்.பி மோகன் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ரூ .951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50,088 பயனாளிகளுக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

2 44

இதனையடுத்து சாலை மார்க்கமாக கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் எம்.பி மோகன் இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கேஎன்.நேரு, முத்துச்சாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, தொ.அ.ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.