எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ‘போட்டித் தேர்வுகள் மையம்’ தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி குழும நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய கடற்படை, உள்நாட்டு மயமாக்கல் மற்றும் சுயசார்பு கான மையத்தின் இயக்குநர் கமாண்டோ பாலசுந்தரம் பங்கேற்று, மாணவர்களுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறையும், சமூகப்பணிகள் மீது ஆர்வமும், ஈடுபடும், சமூக நலன் பேணுவதிலும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும் அதற்கான அதிகாரமும் ஆளுமையும் கொண்ட பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். மாணவர்களை யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, பாதுகாப்புத் துறை மற்றும் பாரா-மிலிட்டரி படைகள், கேட், ஐ.ஈ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி அளிக்கும் முழுமையான திறன் கொண்ட மையத்தை உருவாக்கியதற்காக நிர்வாகத்தை பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் முன்னிலையில் எஸ்என்எஸ் கல்வி குழுமத்தின் துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொண்டார்.