கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு வகையான சமுதாய பணிகளை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுடன் மதநல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா,1000-அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிரந்தர நூலக உறுப்பினர்  அட்டைகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது .

பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலட்சிய துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் தினேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். செளரிபாளையம் அரசு பொது நூலகத்தின் நூலகர் லட்சுமணசாமி , கத்தோலிக்க தேவாங்க நல சங்கத்தின் செயலாளர் பாபு கென்னடி, மகாலட்சுமி திருக்கோவில் செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர் .

கோவை மாநகராட்சி 51-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்சவேணி மணிகண்டன், மகாலட்சுமி, சண்முகப்பிரியா, கலைச்செல்வி குணாளராஜன், உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்கள். ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள்,பட்டாசுகள்,அரிசி, மளிகைப்பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய மதநல்லிணக்க தீபாவளி நலத்திட்ட உதவிகளை கோவை மாநகராட்சி 86-வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர், கோவை ஓம் கார தியான பீடம் நிறுவனர் சித்த ஸ்ரீ ஈசன் குருஜி,பர்கத் பாஷா, மருத்துவர் சபரி சுரேஷ், கோவை ஜமாத் இஸ்லாமிக் ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், இஸ்லாமிய புத்தக நிலையம் ஜக்கரியா, தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ இஸ்மாயில் பாஷா, எஃப்பி  கேக் சிவகுமார், அருள் குமார் உள்ளிட்டோர் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

சமூகத்தில் பல்வேறு வகையான சமுதாய பணிகளை தொடர்ந்து செய்து வரும் சாதனையாளர்களுக்கு விருதுகளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை வட்டாட்சியர் லட்சுமி நாராயணன் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். 1000-அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நூலகத்தில் கல்வி பயில நிரந்தர நூலக உறுப்பினர் அட்டைகளை Lions club of cbe the grand தலைவர் அகஸ்டின் அவர்கள் சிறப்பித்தார்கள்.