பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொது மேலாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் தர மேலாண்மை ஆலோசகர் ராமமூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர் வித்யா பிரகாஷ், நிறுவனங்களின் தேர்வுக் கட்டுப்பாட்டு இயக்குநர் சந்திரமோகன், பள்ளியின் செயலாளர் நாராயணசாமி மற்றும் உடற்பயிற்சி இயக்குநர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவர்கள் ஆர்வத்துடன் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
