ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2016 முதல் 2024 இல் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ் ஆசிரியை மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் கோவை சாந்தாமணி கலந்துகொண்டு, சிறப்பாக கல்லூரிக்கு பல்வேறு வகையில் சேவை புரிந்த முன்னாள் மாணவ, மாணவவியருக்கு விருது வழங்கினார்.

SREW 2

தொடர்ந்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விழா மலர் வெளியிடப்பட்டது.  மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்தியா மற்றும் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இருநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்வில் கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன், சங்கத் தலைவர் வீணா, செயலாளர் செந்தில் கண்ணன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.