எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்வியில் சிறந்த பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கப்ப்டுகிறது. இதில் சுமார் நூறு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் கலந்து கொண்டு, நவீன கல்வியில் புதுமை மற்றும் தகவமைப்பு தன்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். என்ஐபிஎம் தலைவர் மற்றும் லட்சுமி ரிங் டிராவலர்ஸ் பிரைவேட் லிமிடெட் மனிதவள மேம்பாட்டுத் தலைவர் மீனாட்சிசுந்தரம், என்ஐபிஎம் துணைத் தலைவர், வேலன் வால்வ்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
விழாவில் பேசிய எஸ்.என்.எஸ். நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.என். சுப்ரமணியன், விருது பெற்ற அனைவரும் வாழ்த்தினார். எஸ்.என்.எஸ். குழுமங்களின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விருது பெற்றவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.